உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் முகமது ஷமியின் சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உபி அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் 19 ஆம் தேதி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2ஆவது முறையாக உலகக் கோப்பை தொடரில் மோதுகின்றன. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், முகமது ஷமிக்கு அவரது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோகாவில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பிறந்தவர் முகமது ஷமி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தாலும், விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ஷமி இடம் பெறாமல் இருந்தார். ஷமி இல்லாமல் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெற்று விளையாடினார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் ஷமி மொத்தமாக 23 விக்கெட்டுகள் கைப்பற்றி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ள ஷமி 2 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: விமானப்படை கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான் - வைரல் வீடியோ !!
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது ஷமியை கௌரவிக்கும் வகையில், அவரது சொந்த கிராமமான அம்ரோகாவில் புதிதாக மினி கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும், உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட உள்ளது. இது குறித்து அம்ரோஹா மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் தியாகி, கூறுகையில், முகமது ஷமியின் கிராமத்தில் (சஹஸ்பூர் அலிநகர்) ஒரு மினி-ஸ்டேடியம் மற்றும் திறந்த உடற்பயிற்சி கூடம் கட்ட முன்மொழியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
World Cup | உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!