இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கென்யா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நமீபியா என்று 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்தியா, கென்யா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: விமானப்படை கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான் - வைரல் வீடியோ !!
undefined
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் கென்யா அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் மோதின. இதில், இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனானது.
சம்பவம் 1:
இந்த தொடரில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி உள்பட விளையாடிய 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதில், லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 166 பந்துகள் எஞ்சிய நிலையில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இறுதிப் போட்டியிலும் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சம்பவம் 2:
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரையில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி உள்பட 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
World Cup | உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!
2003 உலகக் கோப்பை:
ஆஸ்திரேலியா 9 லீக் போட்டிகள், 1 அரையிறுதி, இறுதி போட்டி என்று 11 போட்டிகளில் வெற்றி - சாம்பியன். லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2023 உலகக் கோப்பை:
இந்தியா 9 லீக் போட்டிகள், 1 அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி – லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. எஞ்சியிருப்பது இறுதிப் போட்டி மட்டுமே. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.