ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் அதாவது, நவம்பர் 19-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்தில் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 முடிவடையும் நிலையில், நிறைவு விழா நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் ஐகான் துவா லிபா நிகழ்ச்சியை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற விவரங்களின்படி, பிரதமர் நரேந்திர மோடி மோட்டேரா ஸ்டேடியத்தில் இதைப் பார்க்க உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதால், அதை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள். எனவே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய விமானப்படையினரின் சாகச நிகச்சி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு தான் இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்த உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். ஐசிசி உலகக் கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் கிராண்ட் மோதலுக்கு முன்னதாக சிறப்பு பிளேஸர் வழங்கப்படும்.
வெற்றி பெற்ற கேப்டன்களில் கபில் தேவ், ரிக்கி பாண்டிங், கிளைவ் லியோட், ஆலன் பார்டர், அர்ஜுனா ரணதுங்கா, ஸ்டீவ் வாக், எம்எஸ் தோனி, மைக்கேல் கிளார்க் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் அடங்குவர். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இம்ரான் கான், தற்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நேரத்தைக் கழிப்பதால், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார். அதே நேரத்தில், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து கேப்டன்களும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் கௌரவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..