இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், உலகக் கோப்பை வின்னிங் கேப்டன்களுக்கு ஸ்பெஷல் சூட் ஜாக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதில், 20 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி போட்டிக்கு முன்னதாக சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய விமானப்படையினரின் சாகச நிகச்சி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு தான் இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்த உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். ஐசிசி உலகக் கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் கிராண்ட் மோதலுக்கு முன்னதாக சிறப்பு பிளேஸர் எனப்படும் சூட் ஜாக்கெட் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: விமானப்படை கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான் - வைரல் வீடியோ !!
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 12 உலகக் கோப்பைகளில் சாம்பியனான அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், கிளைவ் லியோட் (வெஸ்ட் இண்டீஸ் - 1975), கிளைவ் லியோட் (வெஸ்ட் இண்டீஸ் - 1979), கபில் தேவ் (இந்தியா - 1983), ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா - 1987), அர்ஜுனா ரணதுங்கா (இலங்கை - 1996), ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா - 1999), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா - 2003), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா - 2007), எம்.எஸ்.தோனி (இந்தியா - 2011), மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா - 2015), இயான் மோர்கன் (இங்கிலாந்து - 2019) மற்றும் பேட் கம்மின்ஸ் அல்லது ரோகித் சர்மா (ஆஸ்திரேலியாவா அல்லது இந்தியாவா),2023 வின்னிங் கேப்டன் யார் என்பது நாளை தெரியவரும்.
World Cup | உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!
கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இம்ரான் கான், தற்போது சிறையில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இந்த நிலையில் தான் பிசிசிஐ அதிகாரிகள் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட இருக்கிறது. அதோடு, சிறப்பு பிளேஸர் எனப்படும் சூட் ஜாக்கெட் வழங்கப்படவும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி கலந்து கொள்வார். மேலும், சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.