போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னடைவு..! ஓபிஎஸ் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடும் போட்டி

By karthikeyan VFirst Published May 2, 2021, 11:04 AM IST
Highlights

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதுவரை எண்ணப்பட்டதில், திமுக கூட்டணி 129 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 103 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் 170 தொகுதிகளுக்கு மேல் வென்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவித்த நிலையில், நிஜ கள நிலவரமோ முற்றிலும் முரணாக உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதேபோல திமுக விஐபி வேட்பாளர்களான துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்-க்கும், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகிக்கும் நிலையில், தற்போதைய சூழலில், தங்க தமிழ்ச்செல்வன் 6538 வாக்குகளையும், ஓபிஎஸ் 6414 வாக்குகளையும் பெற்றுள்ளனர். வெறும் 124 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ண வேண்டியிருப்பதால், மீண்டும் ஓபிஎஸ் முன்னிலை பெறுவார். ஆனாலும் இருவருக்கும் இடையே போட்டி மிகக்கடுமையாகவே இருக்கும்.

click me!