#RRvsSRH சாரி வார்னர்.. உங்களுக்கு டீம்ல இடம் இல்ல..! வார்னருக்கு மாற்று மற்றொரு அதிரடி வீரர்

By karthikeyan VFirst Published May 1, 2021, 9:57 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதி சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் அணி பொதுவாகவே டாப் ஆர்டரை அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில், அதிலும் வார்னர் ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், ஆடும் லெவனில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி, வார்னருக்கு பதிலாக ஜேசன் ராயை சேர்க்கிறது.

வார்னரை ஆடும் லெவனில் இருந்து தூக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால்தான், வார்னரை கேப்டன்சியிலிருந்து நீக்கி, வில்லியம்சனை கேப்டனாக நியமித்துள்ளது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம். எனவே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணியில் வார்னருக்கு இடம் இல்லை. அவருக்கு பதிலாக ஜேசன் ராய் இறக்கப்படுவார்.

இங்கிலாந்து வீரர்களான ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கவுள்ளனர். 

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ஜெகதீஷா சுஜித், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல். 
 

click me!