இங்கிலாந்தில் பஸ்ல போய்க்கொண்டே ஐபிஎல் இறுதிப் போட்டி பார்க்கும் இந்திய வீரர்கள்!

By Rsiva kumar  |  First Published May 29, 2023, 9:13 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் அங்கே பஸ்ல சென்று கொண்டே ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்க்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், எப்போதும் இல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இடது கையால் டாஸ் சுண்டிவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எப்போதும் இல்லாமல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இடது கையில் டாஸ் போட்ட தோனி – வைரலாகும் புகைப்படம்!

Tap to resize

Latest Videos

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் சுப்மன் கில் 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து தீபம் சாஹர் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஐபிஎல் 2023 – 16ஆவது சீசனில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த சுப்மன் கில்!

தற்போது வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் அங்கு பஸ்ல சென்று கொண்டே சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியை பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழைக்கு வாய்ப்பில்லை: இன்று 40 ஓவர்கள் போட்டி தானாம்: சென்னை - குஜராத் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

 

Team India watching the IPL 2023 Final from the UK. pic.twitter.com/aPBlQYJxuV

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!