குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இடது கையால் டாஸ் போட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில், எப்போதும் இல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இடது கையால் டாஸ் சுண்டிவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 – 16ஆவது சீசனில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த சுப்மன் கில்!
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் சுப்மன் கில் 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து தீபம் சாஹர் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மழைக்கு வாய்ப்பில்லை: இன்று 40 ஓவர்கள் போட்டி தானாம்: சென்னை - குஜராத் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
MS Dhoni spun the coin with his left hand.
I think it's happening for the first time. (might be wrong as well) pic.twitter.com/DD9sphTLuh