இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரையில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தற்போது இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.
முகமது ஷமியின் சொந்த கிராமத்தில் மினி கிரிக்கெட் மைதானம், உடற்பயிற்சி கூடம் கட்ட உபி அரசு முடிவு!
undefined
இதில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரையில் இந்திய அணி பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து விளங்கி வருகிறது. இதில் ஆச்சரியப்படுத்துவது என்னவென்றால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுயநலமின்றி விளையாடி ரன்கள் சேர்த்து வருகிறார். இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் ரோகித் சர்மா 0, 131, 86, 48, 46, 87, 4, 40, 61, 47 என்று மொத்தமாக 550 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாரான இந்திய அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பலம் – ரோகித் சர்மா:
இந்திய அணியின் முதல் பலமே கேப்டன் ரோகித் சர்மா தான். தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்துவிடுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதியில் போட்டியில் ரோகித் சர்மாவின் 27 பந்துகளில் 45 ரன்கள் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தது. இதன் மூலமாக இந்திய அணி 397 ரன்கள் குவித்து 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலியின் சாதனைகள்:
இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சாதனைகள் படைத்து வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலிலும் விராட் கோலி நம்பர் 1. அவர், 711 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 117 ரன்கள் அடங்கும்.
ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்:
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணி இக்கட்டான கட்டத்தில் இருக்கும் போதெல்லாம், நிதானமாகவும், தேவைப்படும் போது அதிரடியாகவும் விளையாடி ரன்கள் குவித்துள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடரில் 4ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 10 போட்டிகளில் மொத்தமாக 526 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று கேஎல் ராகுல் 386 ரன்கள் எடுத்துள்ளார்.
முகமது ஷமி:
பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள் என்றால், பவுலிங்கில் முகமது ஷமி தனது சிறப்பான பந்து வீச்சால் 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் குவித்துள்ளார். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார். இதுதவிர 2 முறை 5 மற்றும் 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 4 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: விமானப்படை கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான் - வைரல் வீடியோ !!
பலவீனம்: முகமது சிராஜ்:
இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசினாலும் முகமது சிராஜ் அதிக ரன்களை வாரி வழங்கி வருகிறார். 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் 7 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
World Cup | உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!
இந்திய அணியின் லோயர் ஆர்டர் சற்று பலவீனமாக உள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால், லோயர் ஆர்டர் பேட்மேன்கள்தான் சற்று கை கொடுக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் லோயர் ஆர்டர் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரவீந்திர ஜடேஜாவிற்கு பிறகு இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இல்லை. குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே ஆஸ்திரேலியா அணியில் லோயர் ஆர்டரில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர்.