முடியாதுனு எதுவுமே இல்லடா.. கஷ்டமான சாதனையை செய்து காட்டிய இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 13, 2019, 5:01 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலுமே வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை வென்றுவிட்டது. 
 

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 

சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 11வது டெஸ்ட் தொடர் இது. இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 

இதற்கு முன்னதாக 1994-95 முதல் 2000-01 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், 2004 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தலா 10 டெஸ்ட் தொடர்களை வென்றதுதான் சாதனையாக இருந்தது.

ஸ்டீவ் வாக் மற்றும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் ஆல்டைம் சிறந்த அணிகளில் ஒன்று. அந்த காலக்கட்டத்தில் வெற்றிகளை மட்டுமே ருசித்து பழக்கப்பட்ட அணிகள் அவை. எதிரணி எதுவாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்து வெற்றிகளை குவித்த அந்த ஆஸ்திரேலிய அணியின் ரெக்கார்டையே இந்திய அணி தகர்த்துவிட்டது. 
 

click me!