உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!

By Rsiva kumar  |  First Published Jun 6, 2023, 3:34 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் போட்டியை காணலாம்.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

Tap to resize

Latest Videos

ஐபிஎல் 16ஆவது சீசனை முடித்த கையோடு இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலியாவுக்கு தான் சாதகமாக உள்ளது – ரிக்கி பாண்டிங்!

கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் எப்படியும் ஐசிசி சாம்பியன் டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலிய அணிக்கு தான் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்தியா பிளேயிங் 11 குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!

  1. ரோகித் சர்மா
  2. சுப்மன் கில்
  3. சட்டேஷ்வர் புஜாரா
  4. விராட் கோலி
  5. அஜிங்கியா ரஹானே
  6. கேஎஸ் பரத் அல்லது இஷான் கிஷான்
  7. ரவீந்திர ஜடேஜா
  8. ஷர்துல் தாக்கூர்
  9. முகமது ஷமி
  10. முகமது சிராஜ்
  11. உமேஷ் யாதவ் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின்
click me!