இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

By Rsiva kumarFirst Published Jun 6, 2023, 2:44 PM IST
Highlights

பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட பிட்சே இப்படி இருந்தால் எப்படி விளையாடுவது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பக 3 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்த இந்தியா இந்த முறை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலியாவுக்கு தான் சாதகமாக உள்ளது – ரிக்கி பாண்டிங்!

ஐபிஎல் 16ஆவது சீசனை முடித்த கையோடு இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து மைதானங்கள் ஆசிய மைதானங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தயார் செய்யப்படும். அதன்படி இந்த மைதானம் ஆஸி, அணிக்கு ஏற்றார் போன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MPL 2023: ரூ.14.8 கோடிக்கு வாங்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்; புனே அணிக்கு கேப்டனாக நியமனம்!

இதன் காரணமாகத்தான் ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மைதானம் ஆஸிக்கு சாதமாக இருப்பதால், கண்டிப்பாக ஆஸி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த மைதானம் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்கு நல்லவொரு பிட்ச் தான் வழங்குவார்கள்.

இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!

ஆனால், இந்த முறை தற்போது வழங்கப்பட்டுள்ள மைதானம் கொஞ்சம் மோசமானதாக உள்ளது. பந்து பவுன்சராக வருகிறது. இதன் காரணமாக அணி வீரர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும், இறுதிப் போட்டிக்காக வழங்கப்பட்டுள்ள மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமற்றதாக கூட இருக்கலாம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!

click me!