இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலியாவுக்கு தான் சாதகமாக உள்ளது – ரிக்கி பாண்டிங்!

By Rsiva kumarFirst Published Jun 6, 2023, 1:41 PM IST
Highlights

இங்கிலாந்தில் இப்போதுள்ள சூழல்படி பார்த்தால் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறுவதற்கு அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக ஆஸி. முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

MPL 2023: ரூ.14.8 கோடிக்கு வாங்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்; புனே அணிக்கு கேப்டனாக நியமனம்!

இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், இப்போதுள்ள சுழலில் தங்களது நாட்டில் இருப்பதைப் போன்று இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் தற்போது உள்ள கால நிலைகள் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவிற்கு தான் சாதகமாக உள்ளது.

இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!

சமீப காலமாக ஆஸ்திரேலிய வீரர்களும் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால், இந்திய வீரர்கள் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து வரிசையாக ஓய்வு இல்லாமல் விளையாடி வந்துள்ளனர். குறிப்பாக கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆதலால், அவர்கள் களைப்பாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!

மேலும் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் வெற்றி காண்பதற்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டிய நிலையில், இந்திய அணியைப் பொறுத்த வரையில், அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது. இருப்பினும், இவர்கள் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

click me!