NZ vs IND: நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 24, 2022, 2:56 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து  3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை 1-0 என ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வென்றது.

கேப்டன் ரோஹித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறாததால் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் இந்திய அணி ஷிகர் தவான் கேப்டன்சியில் களமிறங்குகிறது.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (நவம்பர் 24) ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசையிலும், சூர்யகுமார் 4ம் வரிசையிலும் ஆடுவார்கள். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் ஆடுவார். டி20 தொடரில் இவரை ஆடவைக்காததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எனவே அவருக்கு கண்டிப்பாக ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பளிக்கப்படும். ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும். ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், இந்த கடினமான முடிவை இந்திய அணி எடுத்தாக வேண்டும்.

ஸ்பின்னர்களாக சாஹல் - குல்தீப் ஜோடி மீண்டும் சேர்ந்து ஆடும் என எதிர்பார்க்கலாம். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் ஆடுவார்கள். இவர்களில் தீபக் சாஹர் மற்றும்ஷர்துல் தாகூர் ஆகிய இருவருமே பேட்டிங் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் என்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் நல்ல டெப்த் கிடைக்கும்.

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். 
 

click me!