NZ vs IND: டி20 தொடரில் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? ஹர்திக் பாண்டியா விளக்கம்

By karthikeyan VFirst Published Nov 22, 2022, 10:13 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு வழங்காதது ஏன் என்று பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
 

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

டி20 தொடரில் பேட்டிங்கில் இஷான் கிஷனுக்கும், பவுலிங்கில் சிராஜுக்கும் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மற்றபடி ஏற்கனவே ஆடிய வீரர்கள் தான் ஆடினார்கள். சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், உம்ரான் மாலிக் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கூட சர்ச்சையாகவில்லை. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பு கிடைக்காததுதான் சர்ச்சையானது.

NZ vs IND: சூர்யகுமார் யாதவை வீழ்த்துவது எப்படி..? ரோஸ் டெய்லர் வகுத்து கொடுத்த செம வியூகம்

சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன். அதிரடியாக பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடும் திறமையை இயல்பாகவே பெற்றவர். பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர். அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது எப்போதுமே சர்ச்சையாக இருந்துவந்துள்ளது. அவருக்கு தொடர்ச்சியாக 10 போட்டிகளாவது ஆட வாய்ப்பளித்துவிட்டு, பின்னர்தான் அவர் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியிருந்தார்.

நியூசிலாந்து தொடரில் ஆடும் லெவனில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகிய இருவரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. எனவே சஞ்சு சாம்சன் எடுக்கப்படாதது சர்ச்சையானது. அவர்களில் யாருக்காவது பதில் சஞ்சு சாம்சனை ஆடவைத்திருக்கலாம். அதேபோல 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசவல்ல இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கை டி20 உலக கோப்பை அணியில் எடுக்காததே விமர்சிக்கப்பட்டது. அப்படியிருக்கையில், நியூசிலாந்து தொடரிலும் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

டி20 தொடரை இந்திய அணி 1-0 என வென்ற நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதர்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, வெளியிலிருப்பவர்கள் பேசுவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அது எங்களை பாதிக்கவும் செய்யாது. இதுதான் என் அணி. பயிற்சியாளருடன் ஆலோசித்து சிறந்த அணியுடன் ஆடினோம். இது சிறிய தொடர். பெரிய தொடரில் அனைத்து வீரர்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த மாதிரியான தொடர்களில் அனைவரும் ஆடவைக்கப்படுவார்கள். தீபக் ஹூடா கூடுதல் பவுலிங் ஆப்சனை வழங்கினார். அதுமாதிரியான ஆப்சன் இருக்கும்போது எதிரணியை சர்ப்ரைஸ் செய்ய முடியும் என்றார் ஹர்திக் பாண்டியா.
 

click me!