நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 2 இந்திய வீரர்கள் அறிமுகம்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 4, 2020, 11:46 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 
 

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களையும் வென்று வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், கடந்த ஆண்டு அடைந்த ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் டி20 ஒயிட்வாஷ் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து உள்ளது. 

ஆனால் டி20 போட்டியில் அடைந்த தோள்பட்டை காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. வில்லியம்சன் தான் அந்த அணியின் மிகப்பெரிய பலமே. எனவே அவரே ஆடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. வில்லியம்சன் ஆடாததால் அந்த அணியை டாம் லேதம் கேப்டனாக செயல்பட்டு வழிநடத்தவுள்ளார். 

கடைசி டி20 போட்டியில் அடைந்த காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனுமான ரோஹித் சர்மா  விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார். 

Also Read - டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ப்ரித்வி ஷா கம்பேக்.. இளம் ஃபாஸ்ட் பவுலருக்கு அறிமுக வாய்ப்பு.. கண்டிஷனுடன் எடுக்கப்பட்ட சீனியர் வீரர்

முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில், பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிராத இவர்கள் இருவரும் நாளைய போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்கவுள்ளனர். 

ஏனெனில் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாம் வரிசையில் தான் இறங்குவார் என கேப்டன் கோலி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். எனவே பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்குவார். கேப்டன் கோலி மூன்றாம் வரிசையிலும், வழக்கம்போல ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையிலும் இறங்குவார்கள். ஐந்தாம் வரிசையில் கேஎல் ராகுல். அவரே விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். எனவே ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. 

Also Read - ரோஹித்தை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகிய மற்றொரு வீரர்.. மாற்று வீரர் அறிவிப்பு.. 2 ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இணைந்த வீரர்

மனீஷ் பாண்டே டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்குத்தான் ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்படும். அதனால் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. மனீஷ் பாண்டே ஆறாம் வரிசையில் இறங்குவார். 

ஸ்பின் பவுலர்களாக ஜடேஜாவும் சாஹலும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆடுவார்கள். நவ்தீப் சைனி சேர்க்கப்பட வாய்ப்பில்லை. ஷிவம் துபே சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்பதால், ஒரு பவுலர் பேட்டிங் ஆட தெரிந்தவராக இருக்க வேண்டும். எனவே பேட்டிங் டெப்த்தை உறுதிப்படுத்தும் விதமாக அணி காம்பினேஷன் இருக்கும் என்பதால் ஷர்துல் தாகூர் ஆடுவதற்கான வாய்ப்புதான் அதிகம்.

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.
 

click me!