இந்திய அணி விளையாடிய 579 டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக இங்கிலாந்திற்கு எதிராக நடந்த 5ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதோடு, 178 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு நடந்த 4 போட்டிகளில் வரிசையாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி மொத்தமாக 579 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 வெற்றி மற்றும் 178 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும், 222 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டி மட்டுமே டையில் முடிந்துள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
4-1 டெஸ்ட் தொடர் வெற்றி:
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, ஆசஸ் தொடர் 1897/98 (ஹோம்)
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, ஆசஸ் தொடர் 1901/02 (ஹோம்)
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா, ஆசஸ் தொடர் 1911/12 (அவே)
இந்தியா – இங்கிலாந்து – 2024 (ஹோம்)
இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணியின் வெற்றி:
இன்னிங்ஸ், 75 ரன்கள் – சென்னை, 2016
இன்னிங்ஸ், 64 ரன்கள் – தரம்சாலா, 2024
இன்னிங்ஸ், 46 ரன்கள் – ஹெடிங்க்லே, 2002
இன்னிங்ஸ், 36 ரன்கள் – மும்பை, 2016
இன்னிங்ஸ், 25 ரன்கள் – அகமதாபாத், 2021
இன்னிங்ஸ், 22 ரன்கள் – சென்னை, 1993
இன்னிங்ஸ், 15 ரன்கள் – மும்பை, 1993
இன்னிங்ஸ், 8 ரன்கள் – சென்னை, 1952 (டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதல் வெற்றி).
இந்திய அணியின் வெற்றி தோல்வி சதவிகிதங்கள்:
முதல் 24 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0 (1952)
100 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0.25 (1967)
200 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0.48 (1982)
300 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0.57 (1996)
400 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0.68 (2006)
500 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 0.82 (2016)
579 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு: 1 (2024)
இந்திய அணியின் வெற்றி தோல்வி சதவிகிதங்கள்:
1932-1951: 0 (23 டெஸ்ட் போட்டிகள்)
1952-2000: 0.623 (313 டெஸ்ட் போட்டிகள்)
2001 - 2014: 1.340 (150 டெஸ்ட் போட்டிகள்)
2015 – தற்போது வரையில்: 2.545 (93 டெஸ்ட் போட்டிகள்)
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியா சிறந்த வெற்றி – தோல்வி விகிதங்களை கொண்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 1.888 என்று வெற்றி தோல்வி விகிதங்களை கொண்டுள்ளது.
𝙒.𝙄.𝙉.𝙉.𝙀.𝙍.𝙎! 🏆
Congratulations on winning the Test Series 4⃣-1⃣ 👏👏 pic.twitter.com/IK3TjdapYv