வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!

By Rsiva kumar  |  First Published Jul 3, 2023, 5:28 PM IST

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய வீரர்கள் வாலிபால் விளையாடிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸீல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பிரமாண்டமாக தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ்: பரிசுத் தொகை மட்டும் ரூ.464 கோடி!

Tap to resize

Latest Videos

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் வந்துள்ளனர். அங்கு முதல் கட்டமாக இன்று அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். வரும் 6ஆம் தேதி பயிற்சி போட்டியில் விளையாட இருக்கின்றனர். உள்ளூர் வீரர்கள் உடன் இணைந்து பயிற்சி போட்டி நடக்க இருக்கிறது.

டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!

இந்த நிலையில், வெவ்வேறு விமானங்கள் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் வந்த இந்திய வீரர்கள் அங்கு பீச்சில் வாலிபால் விளையாடியுள்ளனர். அவர்கள் வாலிபால் விளையாடும் வீடியோவை இந்திய அணியின் விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

IND vs AFG ICC உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட்டு முன்பதிவு செய்வது எப்படி?

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் இடம் பெற்று விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதையடுத்து, இந்தியாவுடன் தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!

இந்தியா டெஸ்ட் வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

 

King Kohli has reached West Indies for the Test & ODI series. pic.twitter.com/ILqMqGrcwx

— Johns. (@CricCrazyJohns)

 

𝗧𝗼𝘂𝗰𝗵𝗱𝗼𝘄𝗻 𝗖𝗮𝗿𝗶𝗯𝗯𝗲𝗮𝗻! 📍

Ishan Kishan takes over the camera to shoot 's beach volleyball session in Barbados 🎥😎

How did Ishan - the cameraman - do behind the lens 🤔 | pic.twitter.com/ZZ6SoL93dF

— BCCI (@BCCI)
click me!