ENG vs IND: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் இதுதான்..!

Published : Jul 02, 2022, 09:46 PM IST
ENG vs IND: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் இதுதான்..!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து இறக்குவது கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையே எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் டெஸ்ட் போட்டி முடிந்த பின், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், அதற்காக தயாராகிவரும் இந்திய அணி வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்வது அவசியம். 

இதையும் படிங்க - அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்

ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்வது சவாலான காரியம்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம் கிடைக்காத தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி ஆகியவற்றில் அபாரமாக பேட்டிங் ஆடினர்.

இதையும் படிங்க - ENG vs IND: இந்திய அணி நிர்வாகத்தின் இந்த துணிச்சலான முடிவு பலன் தந்தது.. பாராட்டியே தீரணும்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி ஆகியோர் முதல் டி20போட்டியில் ஆடமாட்டார்கள். கடைசி 2 போட்டிகளில் ஆடுவார்கள். அவர்களும் அணியில் இடம்பெறும் போட்டிகளுக்கான ஆடும் லெவன் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!