IND vs AUS: திரும்ப திரும்ப ஆஸியிடம் அடி வாங்க தயாரான டீம் இந்தியா – டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

By Rsiva kumar  |  First Published Nov 21, 2023, 9:32 AM IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனானது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் 60 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

வினி ராமனையும் விட்டு வைக்காத வன்ம கும்பல்... மேக்ஸ்வெல் மனைவியை டார்கெட் செய்து மிரட்டல்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 58 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு குறைவான ரன்கள் எடுத்ததே காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது, என்னால் உதவ முடியாத நிலை - ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். மேலும், அவரது காயம் இன்னும் முழுமையாக குணமாகாததால் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் 3 டி20 போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி 2 டி20 போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி 2 டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ஜித்தேஷ் சர்மா என்று பலரும் இடம் பெற்றுள்ளனர்.

டிரெஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்!

டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை:

23-11-23 - வியாழன் – முதல் டி20 – விசாகப்பட்டினம்

26-11-23 – ஞாயிறு – 2ஆவது டி20 – திருவனந்தபுரம்

28-11-23 – செவ்வாய் – 3ஆவது டி20 – கவுகாத்தி

01-12-23 – வெள்ளி – 4ஆவது டி20 – ராய்பூர்

03-12-23 – ஞாயிறு – 5ஆவது டி20 – பெங்களூரு

1995 ரக்பி உலகக் கோப்பையை வென்ற முன்னாள் வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் பலி!

 

🚨 NEWS 🚨’s squad for T20I series against Australia announced.

Details 🔽 https://t.co/2gHMGJvBby

— BCCI (@BCCI)

 

click me!