காயத்திலிருந்து மீண்டு வந்த டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்து அதனை சாதனையாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 27ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 175 ரன்கள் குவித்தது. இதில், வார்னர் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Australia vs New Zealand: தொடர்ந்து 3ஆவது முறையாக 350 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலியா சாதனை!
காயத்திலிருந்து மீண்டு வந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய இந்தப் போட்டியில் உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்தார். அதுவும் குறைந்த பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் 59 பந்துகளில் சதம் அடித்துள்ளார். மேலும், 67 பந்துகளில் 10 பவுண்டரி 7 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தரம்சாலாவில் சிக்ஸர் மழை – வான வேடிக்கை காட்டிய வார்னர், டிராஸ் ஹெட் – ஆஸி, 388 ரன்கள் குவிப்பு!
வார்னர் மற்றும் ஹெட் இருவரும் அதிரடியாக விளையாடியதன் மூலமாக ஆஸ்திரேலியா 23.2 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. ஆனால், அதன் பிறகு வந்த வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்கவே ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக 350 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. மேலும், இந்தப் போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் (20) அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19 சிக்ஸர்கள் அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.