ஏன் சென்னை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறவில்லை? தவறு எங்குள்ளது?

By Rsiva kumarFirst Published Dec 24, 2022, 3:35 PM IST
Highlights

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை எடுக்காதது வருத்தமளிக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகரான ரத்தினவேல் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

கொச்சியில் நடந்து முடிந்த ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்தில் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், ஹாரி ப்ரூக்ஸ், மாயங்க் அகர்வால் ஆகியோர் தான் அதிக தொகைக்கு வாங்கப்பட்டன. முதலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ரூ.2 கோடிக்கு மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார். டி20 போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் சீசனாக இருந்தாலும் சரி ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு, அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரர்கள் தான் அதிக ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

I dont bother anymore about CSK or IPL. But this CSK side without a TN player for the first time indicates that there is something wrong either with CSK or with TNCA or both

— Rathnavel Ponnuswami (@reavan)

நேற்று நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறவில்லை. சென்னை அணியில் நடந்து முடிந்த ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி டிராபியை தட்டிச் சென்றது. இதனால், தான் என்னவோ இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பென் ஸ்டோக்ஸை சென்னை அணி அதிக்பட்சமாக ரூ.16.26 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்திய அணியின் வீரரான அஜின்க்ய ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இப்படி ஒவ்வொருவராக எடுத்து முடித்த நிலையில், இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறவில்லை.

IPL Mini Auction 2023: ஐபிஎல் அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா?

இது குறித்து கிரிக்கெட் விமர்சகரான ரத்தினவேல் பொன்னுசாமி டுவிட்டர் பக்கத்தில் தமிழக வீரர்கள் இடம் பெறாத தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்று எதைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், இந்த முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் ஒருவர் கூட தமிழக வீரர் கிடையாது. சென்னை சூப்பர் கிங்ஸ்லயா அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திலயா? எங்கு தவறு நடந்துள்ளது? யார் தவறு செய்துள்ளார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை யார் நடத்துறாங்க தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ்:

  1. ஷேக் ரஷீத் - ரூ.20 லட்சம்
  2. அஜய் மண்டல் - ரூ.20 லட்சம்
  3. பகத் வர்மா - ரூ.20 லட்சம்
  4. அஜிங்க்யா ரகானே - ரூ.50 லட்சம்
  5. நிஷாந்த் சிந்து - ரூ.60 லட்சம்
  6. கைல் ஜேமிசன் - ரூ.1 கோடி
  7. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

BAN vs IND: 2வது இன்னிங்ஸிலும் வங்கதேசம் பேட்டிங்கில் சொதப்பல்..! இந்திய அணியின் வெற்றி உறுதி

click me!