விஜய் ஹசாரே டிராபி: 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாதனை வெற்றி

By karthikeyan VFirst Published Nov 21, 2022, 6:13 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேச  அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாதனை வெற்றி பெற்றது.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு வீரர்கள் நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.

தமிழ்நாடு தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி சாதனை படைத்த நிலையில், இந்த 5 போட்டிகளிலும் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

சூர்யகுமார் பற்றி 11 ஆண்டுக்கு முன் ரோஹித் போட்ட டுவீட்!இப்போது வைரல்; ரோஹித்தின் விஷன்.. கொண்டாடும் ரசிகர்கள்

ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா ஆகிய 4 அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்ற தமிழ்நாடு அணி, இன்று அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்தில் 25 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 277 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ஜெகதீசன், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் (264) சாதனையையும் முறியடித்தார். சாய் சுதர்சனும் 154 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 506 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி.

NZ vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

507 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்கை விரட்டிய அருணாச்சல பிரதேச அணியை வெறும் 71 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 435 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு அணியின் மிகப்பெரிய வெற்றி இதுதான்.
 

click me!