AUS vs ENG: கடைசி ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Nov 21, 2022, 04:47 PM IST
AUS vs ENG: கடைசி ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. 

கடைசி ஒருநாள் போட்டி நாளை மெல்பர்னில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். கடந்த போட்டியிலேயே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் கேப்டன்கள் ஆடவில்லை.

சூர்யகுமார் பற்றி 11 ஆண்டுக்கு முன் ரோஹித் போட்ட டுவீட்!இப்போது வைரல்; ரோஹித்தின் விஷன்.. கொண்டாடும் ரசிகர்கள்

தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டதால், இந்த தொடரின் முடிவில் கடைசி போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே கடைசி போட்டியிலும் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் ஆடமாட்டார்கள்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டான் அகர், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க்.

ஒருநாள் போட்டியில் 277 ரன்கள். தொடர்ந்து 5 சதங்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் CSK

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மொயின் அலி (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் டாவ்சன், டேவிட் வில்லி, அடில் ரஷீத்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!