NZ vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 21, 2022, 3:06 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 126 ரன்களுக்கு சுருட்டி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்தில் 111 ரன்களை குவித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார்.

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

இந்திய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி டி20 போட்டி நாளை(நவம்பர் 22) நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஆடாததால் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இஷான் கிஷன், தீபக் ஹூடா ஆகியோருக்கு 2வது டி20 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தநிலையில், சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், உம்ரான் மாலிக் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக 10 போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியிருந்தார்.  எனவே கடைசி டி20 போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். தொடர்ச்சியாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வளித்துவிட்டு சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படும். அதேபோல, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு ஆட வாய்ப்பளிக்கப்படும்.

ஒருநாள் போட்டியில் 277 ரன்கள். தொடர்ந்து 5 சதங்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் CSK

உத்தேச இந்திய அணி:

ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.
 

click me!