T20 World Cup: Afghanistan vs Scotland போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..!

By karthikeyan VFirst Published Oct 25, 2021, 4:38 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் களமிறங்கும் இந்த இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதுகின்றன.

இந்த அணிகள், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ள க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் ஆஃப்கானிஸ்தானும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 2 அணிகளும் மோதுகின்றன.

வங்கதேசம், இலங்கை(தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று இப்போது க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ளன) ஆகிய அணிகளே நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறாத நிலையில், டி20 கிரிக்கெட்டில் தங்களது நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தால் நேரடியாக சூப்பர் 12 தகுதிபெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி.

இதையும் படிங்க - சர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க..! ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்

ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி, ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்கள் உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடி ஏராளமான அனுபவத்தை பெற்றிருப்பதால், அந்த அணி இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுக்கே கடும் சவாலாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஷார்ஜாவில் ஆஃப்கானிஸ்தானும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதிய 6 போட்டிகளிலுமே ஆஃப்கானிஸ்தான் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஸ்காட்லாந்து ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியதேயில்லை. 

எனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியை பெறும் முனைப்பில் ஸ்காட்லாந்து அணியும், ஸ்காட்லாந்துக்கு எதிரான 100 சதவிகித வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - நமது அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. அதை சரிசெய்யணும்! பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் அசாம் ஆற்றிய உரை

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத்(விக்கெட் கீப்பர்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி(கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்.

உத்தேச ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸெர்(கேப்டன்), மேத்யூ க்ராஸ்(விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலும் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல்.
 

click me!