T20 World Cup 2வது அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 2:22 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடரில் இன்று துபாயில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் வரும் 14ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

இதையும் படிங்க - டேரைல் மிட்செல் அதிரடி அரைசதம்.. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த அணி அல்ல என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - நான் என்னடா தப்பு பண்ணேன்? இதுதான் அந்த பையனோட மைண்ட்வாய்ஸா இருக்கும்! தேர்வாளர்கள் பதில் சொல்லணும் - கவாஸ்கர்

இதுவரை இந்த 2 அணிகளும் மோதிய டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 13 முறையும், ஆஸ்திரேலிய அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகளில், இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை தோற்றதேயில்லை என்ற மிகப்பெரிய ரெக்கார்டை வைத்திருப்பது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலம். ஆனால் அதுவே நெருக்கடியும் கூட.

இதையும் படிங்க - அந்த விஷயத்துல விராட் கோலி அப்படியே சச்சின் டெண்டுல்கர் மாதிரி..! சேவாக் அதிரடி

இன்று துபாயில் நடக்கும்  இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

இதையும் படிங்க - இதுக்கும் மேல அந்த பசங்க என்ன செய்தால் டீம்ல எடுப்பீங்க? இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

உத்தேச பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

இதையும் படிங்க - IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்
 

click me!