BBL: விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்து பிரிஸ்பேன் ஹீட்டை ஊதித்தள்ளிய சிட்னி தண்டர் அபார வெற்றி

Published : Dec 27, 2022, 05:12 PM IST
BBL: விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்து பிரிஸ்பேன் ஹீட்டை ஊதித்தள்ளிய சிட்னி தண்டர் அபார வெற்றி

சுருக்கம்

பிக்பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர் அணி அபார வெற்றி பெற்றது.  

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஆலிவர் டேவிஸ், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), குரிந்தர் சந்து, பிரெண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

பிரிஸ்பேன் ஹீட் அணி:

மேக்ஸ் பிரயண்ட், காலின் முன்ரோ, மேட் ரென்ஷா, சாம் பில்லிங்ஸ், ஜிம்மி பெர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோஸ் ஒயிட்லி, மைக்கேல் நெசெர், சேவியர் பார்ட்லெட், மார்க் ஸ்டெக்கெட்டீ, மேத்யூ குன்னெமேன், மிட்செல் ஸ்வெப்சன்.

முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரயண்ட்(1), ரென்ஷா(9), சாம் பில்லிங்ஸ்(1), ரோஸ் ஒயிட்லி(8), நெசெர்(0) ஆகிய வீரர்கள் சொதப்பினர். மந்தமாக பேட்டிங்  ஆடிய காலின் முன்ரோ 47 பந்தில் 43 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சேவியர் பார்ட்லெட் 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார். பிரிஸ்பேன் ஹீட் அணியின் மோசமான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்தது.

PAK vs NZ: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை..! பாகிஸ்தானை வைத்து நியூசிலாந்து செய்த தரமான சம்பவம்

122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேத்யூ கில்க்ஸ் ஆகிய இருவருமே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 36 பந்தில் 59 ரன்களும், கில்க்ஸ் 34 பந்தில் 56 ரன்களும் அடிக்க, 12வது ஓவரிலேயே இலக்கை அடித்து சிட்னி தண்டர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?