BBL: மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் அதிரடி அரைசதம்.. மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 26, 2022, 5:05 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), குர்டிஸ் பாட்டர்சன், ஜேம்ஸ் வின்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், ஜாக்சன் பேர்ட், ஸ்டீவ் ஓ கீஃப், இஜாருல்ஹக் நவீத்.

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், பியூ வெப்ஸ்டெர், நிக் லார்கின், ஹில்டன் கார்ட்ரைட், காம்ப்பெல் கெல்லாவே, ஜேம்ஸ் சேமர், லுக் உட், லியாம் ஹாட்சென், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் வெப்ஸ்டெர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 20 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே அடித்தது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாட்டர்சன் 24 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 33 ரன்களும் அடித்தனர். ஜோஷ் ஃபிலிப் ஒரு ரன் மட்டுமே அடித்தார்.  அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 32 பந்தில் 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

click me!