அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்படும் நிலையில், சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் இருவரும் யாரேனும் ஒருவருக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. வரும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
பஞ்சாப் அணியிலிந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!
எனினும், இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து அயர்லாந்து தொடர், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் என்று அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் இருப்பதால், பணிச்சுமையை குறைக்கும் வகையில் பிசிசிஐ சில அதிரடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் சுப்மன் கில்லிற்கும் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அயர்லாந்து டூரில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு?
இதனால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இதில் இவர்கள் பிளேயிங் 11ல் இடம் பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தும் வீரருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடிய அனுபவம் இருக்கும் நிலையில், அவர் அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சூர்யகுமார் யாதவ்விற்கு கேப்டனாக விளையாடிய அனுபவம் இல்லாத நிலையில், அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சஞ்சு சாம்சன் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை நழுவவிட்டால், உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.