வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் ஓவல் பார்க்கில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அயர்லாந்து டூரில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு?
ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பொறுப்பாக ஆடிய ரோகித் சர்மா 74 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில், 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில், 8 பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும். உணவு இடைவேளையின் போது இந்தியா விக்கெட் இல்லாமல் 121 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், தான் ரோகித் சர்மா அரைசதம் அடித்ததன் மூலமாக 3 சாதனைகளை படைத்துள்ளார்.
தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்து ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தோனியை முந்தியுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தோனி 535 போட்டிகளில் விளையாடி 17226 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, ரோகித் சர்மா 462 போட்டிகளில் விளையாடி 17298 ரன்கள் எடுத்து தோனி சாதனையை முறியடித்துள்ளார்.
500ஆவது போட்டி: அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!