யாஷ் தாக்கூர் வீசிய ஓவரில் கீப்பருக்கு பின் லாவகமாக தூக்கி அடிக்க முயற்சித்து சூர்யகுமார் யாதவ் கிளீன் போல்டான சம்பவம் நடந்துள்ளது.
லக்னோவின் கோட்டை என்று சொல்லக் கூடிய ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 63ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் ஆடியது.
தீபக் கூடா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரேரக் மான்கட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் களமிறங்கினார். குர்ணல் பாண்டியா 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பிறகு அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 89 ரன்கள் குவித்தார். இறுதியாக லக்னோ 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.
இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 59 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், யாஷ் தாக்கூர் ஓவரில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கீப்பருக்கு பின் லாவகரமாக தூக்கி அடிக்க முயற்சித்து பந்தில் அவரது பேட்டில் பட்டு கிளீன் போல்டானது. அதன் பிறகு மைதானத்திலேயே அமர்ந்திருந்தார்.
லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?
அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சிய நிலையில் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.
பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Thundering Thakur ⚡️sends SKY back to the pavilion 🔻☝️ | pic.twitter.com/DdKXfo3zaL
— JioCinema (@JioCinema)