IPL 2023: மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்ஸர் மழை.. மும்பை இந்தியன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது லக்னோ

By karthikeyan V  |  First Published May 16, 2023, 10:00 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்து 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன.

லக்னோவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Latest Videos

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நெஹல் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோகீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ஆகாஷ் மத்வால்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், தீபக் ஹூடா, பிரெரக் மன்கத், க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மோசின் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தீபக் ஹூடா(5) மற்றும் குயிண்டன் டி காக் (16) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெரக் மன்கத் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அதன்பின்னர் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய கேப்டன் க்ருணல் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். 49 ரன்கள் அடித்த க்ருணல் பாண்டியா ரிட்டயர்ட் ஹர்ட் ஆக, அதன்பின்னர் பூரன் ஸ்டோய்னிஸுடன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். கடைசி 3 ஓவர்களில் காட்டடி அடித்த ஸ்டோய்னிஸ் 47 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 89 ரன்களை விளாசி கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 177 ரன்களை குவித்து 178 ரன்களை மும்பை இந்தியன்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

click me!