IPL 2023:வாழ்வா சாவா போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 16, 2023, 8:56 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும் நிலையில், அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய3 இடங்களுக்கு சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸை தவிர 7 அணிகளும் போராடிவருகின்றன.

இன்று மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான முக்கியமான போட்டி நடந்துவருகிறது. நாளை நடக்கும் மற்றொரு முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. 

Latest Videos

12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். 2 போட்டிகளிலும் ஜெயித்தாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து பஞ்சாப் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறலாம். எனவே பஞ்சாப் அணிக்கு இது கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி. ஆனால் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்ட டெல்லி கேபிடள்ஸுக்கு இழப்பதற்கு எதுவுமிலை.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..! பேர்ஸ்டோ கம்பேக்.. ஆர்ச்சருக்கு இடம் இல்லை

வாழ்வா சாவா போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றி வேட்கையுடன் களமிறங்குகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தான் டெல்லியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது பஞ்சாப் அணி. எனவே அதே உத்வேகம் மற்றும் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி: 

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

IPL 2023: உம்ரான் மாலிக்கை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்..? பிரயன் லாரா விளக்கம்

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, அமான் கான், அக்ஸர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்.
 

click me!