லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய3 இடங்களுக்கு சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸை தவிர 7 அணிகளும் போராடிவருகின்றன.
இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 13 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமார் கார்த்திகேயாவிற்கு பதிலாக ரித்திக் ஷோகீன் ஆடுகிறார்.
லக்னோ அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைல் மேயர்ஸ் மற்றும் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நவீன் உல் ஹக் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நெஹல் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோகீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ஆகாஷ் மத்வால்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக், தீபக் ஹூடா, பிரெரக் மன்கத், க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மோசின் கான்.