IND vs NZ: மணிக்கட்டில் காயம் – வலியால் துடித்த நிலையில் பயிற்சியிலிருந்து நடையை கட்டிய சூர்யகுமார் யாதவ்!

Published : Oct 21, 2023, 08:52 PM IST
IND vs NZ: மணிக்கட்டில் காயம் – வலியால் துடித்த நிலையில் பயிற்சியிலிருந்து நடையை கட்டிய சூர்யகுமார் யாதவ்!

சுருக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக்கின் முக்கியமான போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், பயிற்சியின் போது சூர்யகுமார் யாதவ்விற்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில் பயிற்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று இந்திய அணியும் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது தனது முதல் ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

ENG vs SA: உலகக் கோப்பையில் முதல் சதம்: அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கிளாசென்!

இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறி ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றார். பரிசோதனையில் அவர் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக நாளை தர்மசாலா மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டிக்காக சென்ற இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை.

NED vs SL: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்ற இலங்கை – புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேற்றம்!

மேலும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். ஆதலால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகி வந்தது. இதுவரையில் நடந்த 4 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் நாளை நடக்க உள்ள போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

NED vs SL:உலகக் கோப்பையில் தோனி – ஜடேஜா சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்த நெதர்லாந்து பிளேயர்ஸ்!

இந்த நிலையில் தான் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யகுமார் யாதவிற்கு மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலியால் துடித்த சூர்யகுமார் யாதவ் பயிற்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறி சென்றுள்ளார்.

எனினும் நாளை நடக்க உள்ள போட்டியில் அவர் இடம் பெறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ்வும் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷான் தான் இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சுப்மன் கில்லிற்குப் பதிலாக முதல் 2 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு தண்ணி காட்டிய ஏங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் – எக்ஸ்டிரா 33, நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு!

Suryakumar Yadav left the training session in pain after being hit on the wrist. (Vipul Kashyap). pic.twitter.com/vB0WztYsJA

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?