மும்பை அணியில் சச்சினைத் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumar  |  First Published May 27, 2023, 7:07 PM IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினுக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.


நடப்பு ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் நாளை (28ஆம் தேதி) நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிகிறது. இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் குவாலிஃபையர் போட்டி நடந்தது. சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

என்னயவா அணியிலிருந்து தூக்குனீங்க: 5 விக்கெட் கைப்பற்றி மாஸ் காட்டிய மோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

இதையடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது. லக்னோ வெளியேறியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது.

இஷான் கிஷானை காயப்படுத்தி சொந்த அணிக்கே சூனியம் வச்ச கிறிஸ் ஜோர்டான்!

மும்பை அணியில் 14 லீக் மற்றும் 2 பிளே ஆஃப் போட்டிகள் என்று மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 605 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 103 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் 605 ரன்கள் எடுத்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010 ஆம் ஆண்டு 618 ரன்களும், 2011 ஆம் ஆண்டு 553 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தான் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!

click me!