IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்

By karthikeyan VFirst Published May 27, 2023, 4:02 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனின் 2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

ஐபிஎல்16வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. இந்த சீசனின் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், எலிமினேட்டரில் ஜெயித்த மும்பை இந்தியன்ஸும், குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதின.

நேற்று அகமதாபாத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது தகுதிப்போட்டியில் ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால்(129) 20 ஓவரில் 233 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 171 ரன்களுக்கு சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ICC WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே முதல் டைட்டிலை வென்று சாதனை படைத்த நிலையில், இந்த சீசனிலும் ஃபைனலுக்கு முன்னேறி ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார் கவாஸ்கர்.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியா தோனியை முன்மாதிரியாக பின்பற்றுகிறார். டாஸ் போடும்போது தோனி எதிரணியுடன் நட்புடன் தான் இருப்பார். முகத்தில் சிரிப்பெல்லாம் இருக்கும். ஆனால் போட்டியின்போது சூழலே வேறு மாதிரி இருக்கும். ஹர்திக் பாண்டியா மிக விரைவில் கேப்டன்சியை கற்றுக்கொண்டுவிட்டார். 

ICC WTC ஃபைனலில் இஷான் கிஷன் - பரத் இருவரில் யார் விக்கெட் கீப்பர்..? ரவி சாஸ்திரி கருத்து

கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்டியா மிரட்டிவிட்டார். தோனியை போலவே அணியை அமைதியான சூழலில் வைத்திருக்கிறார் பாண்டியா. சிஎஸ்கே அணியை போலவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்யும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகிழ்ச்சியான அணியாக உள்ளது. அதற்கான முழு கிரெடிட்டும் ஹர்திக் பாண்டியாவுக்கே என்று சுனில் கவாஸ்கர் பாண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
 

click me!