நம்பர் 4க்கு யார் சரியான தேர்வு? சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன்? ஷிகர் தவான் சொன்ன நச் பதில்!

By Rsiva kumar  |  First Published Aug 11, 2023, 1:06 PM IST

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்குவதற்கு சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் இவர்களில் யார் சரியான தேர்வு என்பது குறித்து ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரும், உலகக் கோப்பை தொடரும் அடுத்தடுத்து நடக்க இருக்கிறது. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ICC ODI Word Cup 2023 Tickets: வரும் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை!

Tap to resize

Latest Videos

அவர்களுக்குப் பதிலாக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியில் நம்பர் 4ல் களமிறங்கி விளையாட யார் சரியான தேர்வாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவான் கூறியுள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2ஆவது அரையிறுதியில் ஜப்பான் உடன் பலப்பரீட்சை!

உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 5 சதங்கள் அடித்தார். உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நம்பர் 4ல் களமிறங்க சூர்யகுமார் யாதவ் தான் சரியான தேர்வாக இருப்பார். அவருக்கு அனுபவமும், திறமையும் இருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் எப்போதும் 4ஆவது இடம் அவருக்குத் தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asian Games 2023: மீண்டும் வருவேன்: வாய்ப்பு பற்றி கவலை இல்லை – ஷிகர் தவான்!

click me!