இலங்கைக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் 2ஆவது இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumarFirst Published Jan 9, 2023, 10:24 AM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா நம்பர் ஒன் இடமும், சூர்யகுமார் யாதவ் நம்பர் 2 இடமும் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 3ஆவது சதத்தை நிறைவு செய்தார். அதுமட்டுமின்றி 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடந்த 25 டி20 போட்டிகளில் இந்திய அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, இலங்கை அணி ஒரு தொடரை கூட இதுவரை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் மட்டும் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், காணாமல் போயிருப்பார்..! PCB-க்கு குட்டு வைத்த சல்மான் பட்

இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசியவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா (19 சிக்சர்கள்) நம்பர் ஒன் இடமும், சூர்யகுமார் யாதவ் (15 சிக்சர்கள்) நம்பர் 2 இடமும் பிடித்துள்ளனர். ஷிவகர் தவான் (12 சிக்சர்கள்) மூன்றாம் இடமும், யுவராஜ் சிங் (11 சிக்சர்கள்) 4ஆவது இடமும், கே எல் ராகுல் (10 சிக்சர்கள்) 5ஆவது இடமும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

ரோகித் சர்மா - 19 சிக்சர்கள்

சூர்யகுமார் யாதவ் - 15 சிக்சர்கள்

ஷிகர் தவான் - 12 சிக்சர்கள்

யுவராஜ் சிங் - 11 சிக்சர்கள்

கே எல் ராகுல் - 10 சிக்சர்கள்

click me!