IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடத்தை இழக்கும் சீனியர் வீரர்..! உத்தேச ஆடும் லெவன்

Published : Jan 08, 2023, 10:31 PM IST
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடத்தை இழக்கும் சீனியர் வீரர்..! உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. டி20 தொடரில் ஆடாத ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். காயத்திலிருந்து மீண்டு ஜஸ்ப்ரித் பும்ராவும் இந்த தொடரில் ஆடுகிறார்.

முதல் ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய அக்ஸர் படேல்..! கடுப்பான ரோஹித் ரசிகர்கள்

ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்குவார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டதால் இஷான் கிஷன் தான் ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர்.

3ம் வரிசையில் வழக்கம்போல விராட் கோலி இறங்குவார். 4 மற்றும் 5ம் வரிசைகளில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடங்களை பிடித்துவிட்டனர். சூர்யகுமார் யாதவை புறக்கணிக்க முடியாது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடிவருவதால் அவரை கண்டிப்பாக பென்ச்சில் உட்காரவைக்க முடியாது. இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால் கேஎல் ராகுல் அணியில் தனது இடத்தை இழப்பார்.

ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக ஜஸ்ப்ரித் பும்ராவுடன், இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆடுவார்கள். 

நான் இன்றைக்கு நல்ல கேப்டனா இருக்கேன்னா, அதுக்கு ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் - ஹர்திக் பாண்டியா

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?