ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய அக்ஸர் படேல்..! கடுப்பான ரோஹித் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Jan 8, 2023, 9:53 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தொடர் நாயகன் அக்ஸர் படேல் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என கடந்த ஆண்டு அடுத்தடுத்து 2 பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்த நிலையில், 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாண்டு டி20 உலக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் வலுவான அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது.

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுலோ, ரிஷப் பண்ட்டோ தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் ஓரங்கட்டி ரோஹித்துக்கு அடுத்த கேப்டன்சி இடத்தை பிடித்தார் ஹர்திக் பாண்டியா. 

நான் இன்றைக்கு நல்ல கேப்டனா இருக்கேன்னா, அதுக்கு ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் - ஹர்திக் பாண்டியா

டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் ஆடவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அந்த தொடரை 2-1 என வென்று கொடுத்தார். ஒருநாள் அணியிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிய அக்ஸர் படேல், அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார். டி20 தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமான பங்களிப்பை செய்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் அக்ஸர் படேல். குறிப்பாக இந்த தொடரில் பேட்டிங்கில் அசத்திவிட்டார். இந்த தொடரில் 20 பந்தில் அரைசதம் அடித்த அக்ஸர் படேல், டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் 7ம் வரிசையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் இடத்தில் ஆடிய அக்ஸர் படேல், அபாரமாக ஆடியதால், ஜடேஜா இல்லாத குறையை தீர்த்து அவரது இடத்தையே பிடித்துவிட்டார். இப்படியொரு பெர்ஃபாமன்ஸுக்கு பிறகு அக்ஸர் படேலை ஓரங்கட்டுவதும் கடினம்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற பின் பேசிய தொடர் நாயகன் அக்ஸர் படேல், கேப்டன் ஹர்திக் பாண்டியா என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சுதந்திரமாகவும் ஃப்ரீயாகவும் ஆடுமாறு அறிவுறுத்தினார். உனக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று நம்பிக்கையளித்தார். அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் சிறப்பாக ஆட காரணம் என்று புகழாரம் சூட்டினார் அக்ஸர் படேல்.

சூர்யா, சின்ன வயசுல என் பேட்டிங்கை பார்த்தது இல்லைனு நினைக்கிறேன்! தன்னைத்தானே கலாய்த்து காமெடி செய்த டிராவிட்

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ஆடிய அக்ஸர் படேல், இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தன் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக ஆடவிட்டதாக கூறியிருப்பது, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை மறைமுகமாக சற்று குறைத்து பேசியிருப்பதாக நினைத்து ரோஹித் சர்மா ரசிகர்கள் அக்ஸர் படேல் மீது அதிருப்தியை விமர்சனங்கள் மூலமாக வெளிப்படுத்திவருகின்றனர்.
 

click me!