BBL: ஹென்ரிக்ஸ், ஜோர்டான் சில்க் அதிரடி அரைசதம்..! சிட்னி தண்டரை ஈசியா வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 8, 2023, 5:09 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் மற்றும் ஜோர்டான் சில்க்கின் அதிரடி அரைசதத்தால் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், குர்டிஸ் பாட்டர்சன், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், பென் துவர்ஷுயிஸ், கிறிஸ் ஜோர்டான், டாட் மர்ஃபி.

வைடு கொடுக்காத அம்பயரை கோபத்தில் கடுமையாக திட்டிய ஷகிப் அல் ஹசன்..! வைரல் வீடியோ

சிட்னி தண்டர் அணி:

மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் ஒயிட்மேன், ஆலிவர் டேவிஸ், அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ், பென் கட்டிங், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), பிரண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணியில் ஒயிட்மேன் தான் அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். ஒயிட்மேன் 34 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அலெக்ஸ் ரோஸ் 34 பந்தில் 34 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்வரிசையில் பென் கட்டிங் 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய சிட்னி சிக்ஸர்ஸ் பவுலர் சீன் அபாட் 4 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அபாட்டின் சிறப்பான பவுலிங்கால் ரன்னே அடிக்கமுடியாமல் திணறிய சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 133 ரன்கள் மட்டுமே அடித்தது. 

134 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் ஜோஷ் ஃபிலிப் (6), ஜேம்ஸ் வின்ஸ்(5), பாட்டர்சன் (2) ஆகிய டாப் 3 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 25 ரன்களுக்கே சிட்னி சிக்ஸர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னர் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் மற்றும் ஜோர்டான் சில்க் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தனர்.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 38 பந்தில் 53 ரன்களும், ஜோர்டான் சில்க் 42 பந்தில் 59 ரன்களும் அடிக்க, 17வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!