வாஷிங்டன் சுந்தர் அவுட்டிற்கு நான் தான் காரணம்: தவறை ஒப்புக் கொண்ட சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumarFirst Published Jan 30, 2023, 5:46 PM IST
Highlights

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ரன் ஆனதற்கு தான் தான் காரணம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 100 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய மகளிர் அண்டர் 19 அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து!

சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒரு கட்டத்தில் ரன் எடுக்க ஓடி வந்த நிலையில், மறுமுனையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தர் வர வேண்டும் என்று மறுத்தார். 

மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு!

ஆனால், அதையும் மீறி சூர்யகுமார் யாதவ் ஓடி வர அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாஷிங்டன் சுந்தர் கிரீஸை விட்டு வெளியில் வந்து அவுட்டானார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவில் புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசிலாந்து! வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம்!

இந்த நிலையில், விருது வழங்கும் விழாவில் பேசிய சூர்யகுமார் யாதவ், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டர். வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் ஆனதற்கு நான் தான் காரணம். அவர் சொன்னது போன்று நான் நடந்திருக்க வேண்டும். ஆனால், வாஷிங்டன் சுந்தர் சரியாகத்தான் எனக்கு சிக்னல் செய்திருக்கிறார். இதைக் கூட நான் கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதோடு சேர்த்து மொத்தமாக 11 முறை சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

click me!