அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முரளி விஜய் ஓய்வு..!

Published : Jan 30, 2023, 03:58 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முரளி விஜய் ஓய்வு..!

சுருக்கம்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.  

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான முரளி விஜய், 2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமானார். 

சர்வதேச கிரிக்கெட்டில் 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக 4490 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சோபிக்காத முரளி விஜய், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2008லிருந்து 2018 வரை 10 ஆண்டுகள் ஆடி 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 3982 ரன்கள் அடித்துள்ளார்.

IND vs NZ: ஹர்திக் பாண்டியாவின் மட்டமான கேப்டன்சி.. கம்பீர் கடும் தாக்கு

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்துவந்த முரளி விஜய், 2018ம் ஆண்டுக்கு பிறகு  டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை இழந்த முரளி விஜய், அதன்பின்னர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

ஐபிஎல்லில் 106 போட்டிகளில் ஆடி 2619 ரன்கள் அடித்துள்ளார் முரளி விஜய். ஐபிஎல்லிலும் முன்னணி வீரராக இருந்த முரளி விஜய், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லிலும் வாய்ப்பை இழந்தார். 

IND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

இந்நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் முரளி விஜய் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். அவருக்கு வயது 38. இனிமேல் எந்த ஃபார்மட்டிலும் தனக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது என்பதை உறுதியாக அறிந்த முரளி விஜய், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!