IND vs NZ: ஹர்திக் பாண்டியாவின் மட்டமான கேப்டன்சி.. கம்பீர் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Jan 30, 2023, 2:48 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி நடந்த லக்னோ ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தும், யுஸ்வேந்திர சாஹலை முழுமையாக பயன்படுத்தாத ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

2022ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. அதன்பின்னர் நடந்த வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்தார். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அந்த 2 டி20 தொடர்களையும் இந்திய அணி வென்றது.

எனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக இனி ஹர்திக் பாண்டியா தான் செயல்படுவார் என தெரிகிறது. ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்சியும் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பவுலர்களை அவர் சரியாக பயன்படுத்தவில்லை; பவுலர்களை ரொடேட் செய்ய தெரியவில்லை என்றும் டேனிஷ் கனேரியா விமர்சித்திருந்தார்.

IND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

2வது டி20 போட்டியிலும் அவரது கேப்டன்சி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நடந்த லக்னோ ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. இந்த போட்டியின் மொத்தம் 40 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் தான் வீசினார்கள்.

இந்த போட்டியில் ஆடிய யுஸ்வேந்திர சாஹல் 4வது ஓவரிலேயே ஃபின் ஆலனை வீழ்த்தினார். 2 ஓவர்களில் 4  ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான வீரரான ஃபின் ஆலனை வீழ்த்தினார். நியூசிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக பந்துவீசிய சாஹலுக்கு 2 ஓவர்களுக்கு மேல் பவுலிங் கொடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் கம்பீர். நன்றாக பந்துவீசிய சாஹலுக்கு 2 ஓவருக்கு பிறகு பவுலிங் கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா, பார்ட் டைம் பவுலரான தீபக் ஹூடாவிற்கு 4 ஓவர்கள் முழு கோட்டாவையும் வழங்கினார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமே இல்லாத அந்த ஆடுகளத்தில் அவரே 3 ஓவர்கள் வீசினார்.

ஒருவேளை சாஹலுக்கு முழு பவுலிங் கோட்டாவை வழங்கியிருந்தால், பேட்டிங்கிற்கு சவாலான லக்னோ ஆடுகளத்தில் 80-85 ரன்களுக்கே நியூசிலாந்தை சுருட்டியிருக்கலாம் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல். சாஹலுக்கு முழு பவுலிங் கோட்டா வழங்காதது பெரிய சர்ப்ரைஸ். இதற்கு என்னிடம் பதிலே இல்லை. 2 ஓவர் வீசி அதில் முக்கியமான வீரரான ஃபின் ஆலனின் விக்கெட்டையும் வீழ்த்திய சாஹலுக்கு அவரது முழு கோட்டாவை வீச வாய்ப்பளிக்காதது பெரிய வியப்பாக உள்ளது. 

Womens U19 T20 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை

ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பளிக்க வேண்டும் தான். ஆனால் சாஹலை அவரது முழு கோட்டா பவுலிங்கை வீசவைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் 80-85 ரன்களுக்கே நியூசிலாந்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். அந்த டிரிக்கை ஹர்திக் பாண்டியா தவறவிட்டார். சாஹலுக்கு 2 ஓவர் மட்டுமே வழங்கிவிட்டு தீபக் ஹூடாவை 4 ஓவர் வீசவைத்ததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கம்பீர் விமர்சித்துள்ளார்.
 

click me!