சர்ஃபராஸ் கான் வாய்ப்புக்காக கதவுகளை தட்டவில்லை; எரிக்கிறார் - அஷ்வின்

By karthikeyan VFirst Published Jan 30, 2023, 3:28 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான வாய்ப்புக்காக சர்ஃபராஸ் கான், இந்திய அணியின் கதவுகளை தட்டவில்லை; எரிக்கிறார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின், சர்ஃபராஸ் கான் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
 

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்துள்ளார் சர்ஃபராஸ் கான்.

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

IND vs NZ: ஹர்திக் பாண்டியாவின் மட்டமான கேப்டன்சி.. கம்பீர் கடும் தாக்கு

இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.  தொடர்ச்சியாக சதங்களாக விளாசி அசத்திவருகிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரஞ்சி போட்டியில் கூட 125 ரன்களை குவித்தார். 

சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அசாதாரணமான பேட்டிங்கை தொடர்ச்சியாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் எடுக்கப்படுகிறார் என்றால், ஒரு இடம் காலியாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால், டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில் அந்த இடத்திற்கு சூர்யகுமாரை விட, சர்ஃபராஸ் கானே  தகுதியான வீரர் என்பதே அனைவரின் கருத்து.  முன்னாள் வீரர்கள் பலருமே சர்ஃபராஸ் கான் புறக்கணிப்பை கடுமையாக விமர்சித்தனர். சர்ஃபராஸ் கானும் தனது வலியை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சர்ஃபராஸ் கான் குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், சர்ஃபராஸ் கான் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்று பெரும் விவாதம் நடந்துவருகிறது. ஆனால் சர்ஃபராஸ் தேர்வை பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. அவர் தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி ரன்களை குவித்துவருகிறார். 2019-2020 மற்றும் 2020-2021 சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 

IND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

நடப்பு சீசனிலும் 600 ரன்கள் அடித்துள்ளார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தெளிவான ஸ்டேட்மெண்ட்டை கொடுக்கிறார். அவரது மிகச்சிறந்த ஸ்டிரைக் ரேட்டுடன், கடந்த சில சீசன்களில் அவரது சராசரி 100 ரன்களுக்கு மேல். டெஸ்ட் அணியில் தனக்கான வாய்ப்புக்காக இந்திய அணி கதவை சர்ஃபராஸ் தட்டவில்லை; கதவுகளை எரிக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர்  அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றார் அஷ்வின்.
 

click me!