ஷாஹீன் அஃப்ரிடிக்கு அருகில் கூட பும்ரா வரமுடியாது! வழக்கம்போலவே இந்தியா மீதான வன்மத்தை உமிழ்ந்த அப்துல் ரசாக்

By karthikeyan VFirst Published Jan 30, 2023, 5:21 PM IST
Highlights

சமகாலத்தின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவரான ஜஸ்ப்ரித் பும்ரா, பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலரான ஷாஹீன் அஃப்ரிடியின் பக்கத்தில் கூட வரமுடியாது என்று அப்துல் ரசாக் வழக்கம்போலவே ஆணவமாக பேசியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஜஸ்ப்ரித் பும்ரா. எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்த இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஜஸ்ப்ரித் பும்ரா.

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், நல்ல வேகம், துல்லியமான யார்க்கர், துல்லியமான பவுன்ஸர்கள் என மிகச்சிறந்த பவுலராக திகழ்ந்துவரும் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவருகிறார். 

IND vs NZ: ஹர்திக் பாண்டியாவின் மட்டமான கேப்டன்சி.. கம்பீர் கடும் தாக்கு

30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 128 விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா, 72 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் ஆடி முறையே 121 மற்றும் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காயத்தால் சிகிச்சை பெற்று பயிற்சி எடுத்துவரும் பும்ரா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறார்.

பும்ராவை கிரிக்கெட் உலகமே மிகச்சிறந்த பவுலர் என்று கொண்டாடிவரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் வழக்கம்போலவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி, இந்திய வீரர்கள் மீதான வன்மத்தை உமிழ்ந்துள்ளார்.

சமகாலத்தின் மற்றொரு தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலராக திகழும் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடிக்கு அருகில் கூட பும்ரா வரமுடியாது என்று கூறியுள்ளார் ரசாக்.

டிவி நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அப்துல் ரசாக், ஷாஹீன் அஃப்ரிடி மிகச்சிறந்த பவுலர். பும்ரா அவருக்கு பக்கத்தில் கூட வரமுடியாது என்று கூறியுள்ளார்.

ND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

அப்துல் ரசாக் கூறுவதால் அது உண்மையோ அல்லது எதார்த்தமோ ஆகாது. ஆனால் தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் மீதும் இந்திய கிரிக்கெட் மீதும் தனது வெறுப்பையும் வன்மத்தையும் உமிழ்ந்துவருகிறார் அப்துல் ரசாக். அப்படி பேசுவதன் மூலம் தனது பொறாமையையும் வன்மத்தையும் தீர்த்துக்கொள்கிறார் அப்துல் ரசாக்.
 

click me!