கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரை இந்த மாதத்தின் தொடக்கத்தில் பரிந்துரைத்தது.
இதில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டு இதே பிரிவில் மகுடம் சூடிய பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பரிசை வெல்லும் போட்டியில் இடம் பெற்றிருந்தார். சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து டி20 போட்டி பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நியூசிலாந்தின் மார்க் சாப்மேன், உகாண்டாவின் அல்பேஷ் ரம்ஜானி, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தியா பிளேயிங் 11 எப்படி? யார் யாருக்கெல்லாம் அணியில் இடம் கிடைக்கும்? ஏன்?
இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது சூர்யகுமார் யாதவ்விற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த 17 டி20 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 733 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் டி20 தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த தொடரை இந்திய அணி 1-1 (3 போட்டிகள்) என்று சமன் செய்தது.
கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஐபிஎல் 16 ஆண்டுகள் நிறைவு – ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!
ஐசிசி டி20 பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங்க் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்ற நிலையில், தொடர்ந்து 2ஆவது முறையாக 2023 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி உள்பட எந்த இந்திய வீரரும் 2 முறை சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரர் என்ற ஐசிசி விருதை எம்.எஸ்.தோனி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் டி20 சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
KIYG 2024 Medal Tally: 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் தமிழ்நாடு 2ஆவது இடத்திற்கு சரிவு!