இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்தியா வந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட விஷயத்திற்காக 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஐபிஎல் 16 ஆண்டுகள் நிறைவு – ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!
அவருக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று ஹைதராபாத்தில் நடந்த பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர்களுடன் ரஜத் படிதாரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் நாளை நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்? யாரெல்லாம் அணியில் இடம் பெறுவார்கள் என்று பார்க்கலாம் வாங்க…
KIYG 2024 Medal Tally: 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் தமிழ்நாடு 2ஆவது இடத்திற்கு சரிவு!
ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் காம்பினேஷன்:
இந்திய அணிக்கு ரைட் அண்ட் லெப்ட் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகும் நிலையில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரரகளாக களமிறங்குவார்கள். உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். ஆதலால், இந்த காம்போ தான் இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில்:
ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடர்ந்து சுப்மன் கில் 3ஆவது வரிசையில் களமிறங்குவார். இந்த இடத்தில் களமிறங்கி கில் பல முறை தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
விராட் கோலி இல்லாத நிலையில், இந்த இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்படலாம். அப்படியில்லை என்றால் விராட் கோலிக்குப் பதிலாக அணியில் ரஜத் படிதாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் இந்த இடத்தில் அவர் களமிறக்கப்படலாம். நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடக் கூடியவர் ஷ்ரேயாஸ் ஐயர். ஆதலால், அவர் 4ஆவது வரிசையில் களமிறக்கப்படலாம்.
கேஎல் ராகுல்:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இக்கட்டான சூழலில் நிதானமாக விளையாடி சதம் விளாசினார். எந்த வரிசையில் களமிறங்கினாலும் விளையாடும் திறமை பெற்றவர் ராகுல். அதனை பல போட்டிகளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்த போட்டி கேஎல் ராகுலுக்கு 50ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்)
சமீபகாலமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாளை நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார். அதன்படி கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைக்கும். இந்திய சுழலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார். இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா:
இந்திய அணிக்கு சுழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படியோ அதே போன்று தான் ரவீந்திர ஜடேஜாவும். இருவரும் இணைந்து 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறனர். ஆதலால், ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெறுவார்.
முகமது சிராஜ்:
ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது நிலையான ஆட்டத்தால் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து ஆடும் லெவன் அணியில் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக விக்கெட்டுகள் கைப்பற்றி வருகிறார். எக்ஸ்டிரா பவுன்ஸ், ஸ்விங் இரண்டிலும் சிராஜின் திறமை அளப்பரியதாக இருக்கிறது.
முகேஷ் குமார்:
ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திடும் முகேஷ் குமார் தொடர்ந்து தேர்வாளர்களின் நன்மதிப்பை பெற்று பிளேயிங் 11ல் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
ஜஸ்ப்ரித் பும்ரா:
ஜஸ்பிரித் பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு மற்றும் முக்கியமான தருணங்களில் அவர் அணிக்காக கொடுக்கும் ஆலோசனை அவரை அணியின் துணை கேப்டனாக வைத்திருக்கிறது. இந்திய கண்டிஷன்களில் பும்ராவின் வேகம் மற்றும் ஸ்விங் இரண்டும் அவருக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.